கோடையில் ஏற்படும் நீர்க்கடுப்பை உடனடியாகச் சீராக்கும் குணம் சிவப்பு முள்ளங்கிக்கு உண்டு. வெயிலால் ஏற்படும் கண்ணெரிச்சலை தணிக்கக்கூடியது. எலும்புகளுக்கும் மூளைக்கும் பலம் தரும் சிவப்பு முள்ளங்கியை சட்னி செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது சுவைக்கலாம். கோடையில் ஏற்படும் நோய்களை விரட்டலாம்.
என்ன தேவை?
சிவப்பு முள்ளங்கி (ராடிஷ்) – கால் கிலோ,
பொட்டுக்கடலை – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5 (அல்லது காரத்துக்கேற்ப),
புளி – சிறிதளவு,
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
சிவப்பு முள்ளங்கியை துருவிக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், புளி, உப்பு, பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்து, கடைசியில் துருவிய சிவப்பு முள்ளங்கியைச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : வெள்ளரி சாப்ஸ்
கிச்சன் கீர்த்தனா : புடலங்காய் ராய்த்தா