ரெட் அலர்ட் : மூன்று மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!
கனமழை எதிரொலியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களில் இன்று காலை முதலே கனமழை தொடர்ந்து வருகிறது.
எனினும் அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும் என்றும்,
தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் பல்கலைக்கழக தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”இந்தியாவுக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள்” : குகேஷ்க்கு குவியும் தலைவர்கள் வாழ்த்து!
ரசிகர்களுக்கு பர்த்டே ’வைப்’ கொடுத்த ரஜினி… அசத்தும் கூலி பட அப்டேட்!
முதல் ’வைக்கம் விருது’ பெற்ற புரட்சி எழுத்தாளர்! யார் இந்த தேவநூர் மகாதேவா?