தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 11) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக் கடல் பகுதியில் நவம்பர் 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இதன் காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உட்பட 14 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
மேலும், நவம்பர் 14 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவம்பர் 12) தமிழகம் – புதுவை இடையே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 5,093 நிவாரண முகாம்கள், 1,149 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் 899 மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மோனிஷா
ரெட் அலர்ட் : புழல் ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு!
கொட்டித் தீர்க்கும் மழை: தட்டச்சு தேர்வு தேதி மாற்றம்!