Recovery of steam generator in Kudankulam

கூடங்குளம்: நீராவி உற்பத்திக் கலன்கள் மீட்பு!

தமிழகம்

நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடலில் பாறையின் இடையே கப்பலுடன் சிக்கிய நீராவி உற்பத்திக் கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு நான்கு அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான நான்கு நீராவி ஜெனரேட்டர்கள் ரஷ்யாவில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து இரண்டு ஜெனரேட்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு கடல் வழியாக ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மற்ற இரண்டு நீராவி ஜெனரேட்டர்களும் கடந்த 7ஆம் தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது தரை தட்டியது.

இந்த மிதவை கப்பல் கடலில் சிக்கிக்கொண்டது. அதை மீட்பதற்காக இலங்கை கொழும்புவில் இருந்து ஓரியன் என்ற மீட்பு கப்பல் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் மிதவை கப்பலை மீட்பதற்கு பணிகள் தொடங்கி நடைபெற்றன. ஆனால் அதை மீட்பதில் சிக்கல் உருவாகியது. தரை தட்டிய மிதவை கப்பல் பாறைப் பகுதியில் சிக்கியதால் பல இடங்களில் சேதம் அடைந்தன.

அந்த சேதத்தை சரி செய்த பின்புதான் மிதவைப் கப்பலை மீட்க முடியும் என்பதால் அதிகாரிகள் அதுவரை மீட்பு பணிகளை நிறுத்தி வைத்தனர். அதே நேரத்தில் ராட்சத கிரேன்கள் மூலமாக மிதவை கப்பலில் உள்ள நீராவி உற்பத்தி கலனை மீட்க முடியுமா எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வந்தனர்.

இந்த நிலையில் 19 நாட்கள் நீடித்த மீட்பு நடவடிக்கைக்கு பின் இந்திய கடற்படை அதிகாரிகளின் முன்னிலையில் நீராவி உற்பத்தி கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: சிவப்பரிசி பாயசம்

Leo Das is a “BADASS” – சர்ப்ரைஸ் மாஸ் ப்ரோமோ!!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *