+2 தேர்வு எழுதாத மாணவர்கள் : அமைச்சர் புதுவிளக்கம்!

தமிழகம்

தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் டீசி வாங்காமல் உள்ளதால் பிளஸ் 2 தேர்வில் ஆப்செண்டான பள்ளி மாணவர்களின் என்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (மார்ச் 19) தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது முதல் நாள் நடைபெற்ற தமிழ்த் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுதாததால் சர்ச்சை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக 15ம் தேதி நடைபெற்ற ஆங்கிலத் தேர்வையும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை. இது கல்வி ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணத்தை அறிய உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் திருச்சி பொன்மலை, கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்ற ‘மக்களை தேடி’ நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி கலந்துகொண்டார்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில்,

“பிரச்சனைகளை புரிந்து கொண்டால் தான், பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்பதால், இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவித்தோம்.

கொரோனா காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் அனைவரையும் முழு தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்தோம். பின்னர் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்ந்து படிக்கவும் அனுமதித்தோம்.

அப்போது, மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து, மாற்றுச் சான்றிதழ் வாங்கிச்செல்லும் வரை, அந்த மாணவரின் பெயரை வருகை பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில், இந்தாண்டு பொதுத் தேர்வு எழுத முன் வராத மாணவர்களில் பலர் தொழிற்பயிற்சி பள்ளிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் சேர்ந்து படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த மாணவர்கள் பள்ளிகளில் இருந்து டிசி பெற்றுக் கொள்ளாமல், அவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் இருந்ததால் தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களை கழித்த பின்னரே தேர்வு எழுதாத மாணவர்களின் சரியான எண்ணிக்கை தெரிய வரும்.” என்றார்.

மேலும், ”ஆண்டு தோறும் சராசரியாக 32 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத முன் வருவதில்லை. கடந்த கல்வியாண்டில் அவ்வாறு தேர்வு எழுத முன் வராத, தேர்வில் தோற்ற 52 ஆயிரம் மாணவர்களை கடந்த ஜூன் மாதம் தேர்வு எழுத வைத்துள்ளோம்.

அதேபோல தற்போது பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை வரும் ஜூன் மாத இறுதியில் நடத்தப்படவுள்ள துணைத்தேர்வினை எழுத வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி மட்டுமே போட்டி!

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் சுருண்ட இந்திய அணி!

reason behind +2 exam absentees
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.