அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ் மணியன் இன்று (செப்டம்பர் 14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இந்துத்துவ சிந்தனையாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான ஆர்.பி.வி.எஸ் மணியன் சென்னையில் நடந்த கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் குறித்து ஒருமையில் இழிவாகவும், அவதூறாகவும் விமர்சித்து பேசியிருந்தார்.
அந்த பேச்சு இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தேசிய தலைவர்களையும், தமிழ் அறிஞர்களையும் இத்தனை இழிவாக பேசியுள்ள ஆர்.பி.வி.எஸ் மணியனை கைது செய்ய வேண்டும் என்று பலரும் சமூகவலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆர்.பி.வி.எஸ் மணியனை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடந்து அவரிடம் ரசிகய இடத்தில் வைத்து விசாரணையும் மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அறுவை சிகிச்சை செய்த தந்தையை சந்தித்த விஜய்
மண் ஏற்றி செல்லும் லாரிகளால் பாதிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்!