அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குடும்ப அட்டைகளின் டிஜிட்டல்மயமாக்கம் நிறைவடைந்துள்ளது. சுமார் 19.5 கோடி குடும்ப அட்டைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்று மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜூலை 20) எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர், “தமிழ்நாடு உட்பட 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண் பதிவு 100% நிறைவடைந்துள்ளது. எஞ்சிய குடும்ப அட்டைகளில் ஆதார் பதிவை 2022 செப்டம்பர் 30-க்குள் மேற்கொள்ள வேண்டுமென்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் குடும்ப அட்டைகளின் வெளிப்படையான விவரங்கள் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
–வேந்தன்