விநாயகர் சதுர்த்தி அன்று தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். வீடுதோறும் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து பின்னர் அந்த சிலைகளை கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பது தான் வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி தினம் நெருங்கி வருவதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று அரசு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இந்த ஆண்டு அரசின் விடுமுறை தின குறிப்பில் செப்டம்பர் 17 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அமாவாசையில் இருந்து 4வது நாள்தான் சதுர்த்தி திதி வரும். அதன் அடிப்படையில்தான் இந்த ஆண்டு ஆவணி மாத அமாவாசை செப்டம்பர் 14 ஆம் தேதி வருகிறது. இதிலிருந்து 4ஆம் நாளான செப்டம்பர் 18ஆம் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என்பதால் சமீபத்தில் விடுமுறை தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளிலும் ரேஷன் கடைகள் செயல்படும்.
இந்நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி 18 ஆம் தேதிதான் என உறுதி செய்யப்பட்டுவிட்டதால் ரேஷன் கடைகளுக்கான விடுமுறை நாளை 17 ஆம் தேதியிலிருந்து 18 ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது.
மோனிஷா
தி.மு.க. ஆட்சியில் 28,102 புதிய தொழில்முனைவோர்: அமைச்சர் அன்பரசன்
”இந்த தடவை மிஸ்ஸே ஆகாது”: பாபர் அசாம் நம்பிக்கை!