வரும் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி பொதுமக்களின் வசதிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) அன்று ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ”வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தின விடுமுறையினை முன்னிட்டு, அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும்.
இதனை முன்னிட்டு, வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும். அதனால் தங்கள் கடைகளில் உள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவு இருப்பை ரேஷன் ஊழியர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
நவம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை வேலை நாளை ஈடுகட்டும் பொருட்டு, அடுத்து ஏதேனும் ஒரு நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும். அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும்” என ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மோதல்: 12 பேர் கைது!