தீபாவளி பண்டிகை: ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகம்

தீபாவளி பண்டிகைக்கான வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நவம்பர் 13 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இனிப்புகள், பலகாரங்கள் செய்வது வழக்கம். இதற்கான அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, உளுந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் நியாய விலைக்கடைகளில் வாங்குவர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை நியாய விலைக்கடைகளில் வாங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நவம்பர் 5 மற்றும் 10 ஆகிய விடுமுறை தினங்களில் இயங்கும் என்று உணவுத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் நவம்பர் 13 மற்றும் 25 ஆகிய தினங்களில் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.490 வங்கிகளில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஓபிஎஸ் அதிமுக வேஷ்டி கட்டினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஜெயக்குமார்

காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றிய ஓபிஎஸ்

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *