ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 31) அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் மாதம் தோறும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்டப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
இந்த பொருட்கள் அரசு மொத்தமாக டெண்டர் மூலம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆனால் கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்டப் பொருட்கள் தாமதமாக வழங்கப்படுகின்றன. இதனால், குறிப்பிட்ட மாதத்திற்கான பொருட்களை குடும்ப அட்டைதாரர்களால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது..
இதுகுறித்து அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஆனால் ஆகஸ்ட் மாதமும் வழக்கம்போல் ரேஷன் பொருட்கள் சரியாக கிடைக்காத நிலையில், பொதுமக்கள் தங்களது வேதனையை தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து ரேஷன் கடைகளில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: முழு விவரம்!
தெலுங்கு சினிமாவிலும் பாலியல் கொடுமைகள் : அறிக்கை வெளியிட கோரும் சமந்தா!