சென்னையில் உள்ள 19 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களிலும் நாளை (டிசம்பர் 10) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேஷன் அட்டை குறைதீர் முகாம் நடைபெற உள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்,
மாண்டஸ் புயல் காரணமாக இந்த குறைதீர் முகாம் நடக்குமா என்கிற சந்தேகம் மக்கள் மனத்தில் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பாக பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாதத்துக்கான குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களிலும், நாளை (டிசம்பர் 10) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது என்றும்,
இந்த முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல், புதிய ரேஷன் அட்டை கோருதல், நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல்,
மேலும் புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெற விரும்புவோர் எந்த மாற்றம் செய்ய வேண்டுமோ அதற்கான சான்று (Proof), ரேஷன் அட்டை, ஆதார் அட்டை கொண்டு செல்ல வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக இந்த குறைதீர் முகாம் நடக்குமா என்கிற சந்தேகம் குறைதீர் முகாமில் கலந்துகொண்டு பயனடைய நினைத்த மக்கள் மனத்தில் ஏற்பட்டுள்ளது.
-ராஜ்
உலக பணக்காரர்கள்: இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட எலான் மஸ்க்
கிச்சன் கீர்த்தனா : மஷ்ரூம் மசாலா ஆம்லெட்