மாணவர்களை அடித்ததால் கைதான பாஜக பிரமுகரும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியாருக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 4) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்து படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களை ரஞ்சனா நாச்சியார் அடித்து கீழே இறக்கினார்.
மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாணவர்களை ரஞ்சனா நாச்சியார் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரஞ்சனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாங்காடு காவல்துறையினர் அவரை இன்று காலை கைது செய்தனர். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் மாலை ஆஜர்படுத்தினர். இந்தநிலையில், மாங்காடு காவல்நிலையத்தில் காலை, மாலை இரு வேளையும் 40 நாட்கள் நடிகை ரஞ்சனா கையெழுத்திட உத்தரவிட்டு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி ராம்குமார் நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – கே.எஸ்.அழகிரி
சுருண்டு விழுந்து மாணவி உயிரிழப்பு : மாரடைப்பு காரணமா?