கனமழை காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவம்பர் 23) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 23) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி: மன்னர் கொடுத்த பரிசு!