ராமேஸ்வரம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: அமைச்சர்  எ.வ.வேலு

தமிழகம்

ராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னார் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து  தொடங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, “ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் பகுதியில் 10 மீட்டர் அளவுக்கு கடல் பகுதியை தூர்வாரி ஆழப்படுத்தினால் சிறிய, வர்த்தக கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக இருக்கும். இதுதொடர்பாக மத்திய அரசிடம் சாகர்மாலா திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கி தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதால் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் பகுதியில் இரண்டு கிலோமீட்டர் தூரம் சாலையை விரிவுபடுத்தி புதிய ஜெட்டி (மீன்பிடி இறங்குதளம்) கட்டி அங்கிருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து விட நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு மணி நேரத்தில் இந்த பயணம் முடியும் வகையில் உள்ளது. இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திட்டமதிப்பீடு தயார் செய்து டெல்லி சென்று மத்திய அமைச்சரிடம் பேசி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் ஒத்துழைப்பைப் பொறுத்து இந்த திட்டம் விரைவில் நிறைவேறும்” என்று  தெரிவித்துள்ளார்.

ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *