தமிழக மீனவர்கள் 7 பேருக்குச் சிறை!

தமிழகம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் நேற்று (அக்டோபர் 26) மாலை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை, யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 27) சிறையில் அடைக்க உள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடி அனுமதிச் சீட்டு பெற்றுக் கொண்டு நேற்று (அக்டோபர் 26) காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்கு சென்றனர்.

நேற்று மாலை கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர்,

ராமேஸ்வரம் மீனவர்களின் படகின் மீது ஏறி படகிலிருந்த மீனவர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, மைக்கேல் ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த கிளிண்டன், பேதுகு, வினிஸ்டன், தயான், மரியான், தானி, ஆனஸ்ட் ஆகிய ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்த மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் தமிழக மீனவர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மீனவர்கள் அனைவரும் இன்று (அக்டோபர் 27) யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து விரட்டி அடித்ததுடன், அவர்களது வலைகளையும் பறித்து கடலில் வீசியுள்ளனர்.

இதனால் மீன் பிடிக்கச் சென்ற படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மோனிஷா

கோவை கார் வெடிப்பு…மவுனம் கலைத்த திமுக…பா.ஜ.க.வை விளாசி தள்ளிய முரசொலி!

கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *