அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது.
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என் ராமஜெயம் 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கை எஸ்பி.செல்வராஜ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக மர்மம் நீடிக்கும் இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த காவல்துறை திட்டமிட்டது.
அதற்கு அனுமதி கோரி, திருச்சி ஜே எம்- 6 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதில், 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, நீதிபதி சிவகுமார் அனுமதி அளித்தார்.
அதன்பேரில், சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் , நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 ரவுடிகளும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒத்துக் கொண்டனர்.
அதன்படி இன்று பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் திண்டுக்கல்( திண்டுக்கல் பாண்டியின் சிஷ்யன்) மோகன்ராம், திண்டுக்கல் நரைமுடி கணேசன், திண்டுக்கல் தினேஷ், சீர்காழி சத்யா( தற்போது பாஜகவில் உள்ளார்) ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.
இவர்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் கூடத்திற்கு வந்துள்ளனர். சோதனையின் போது, 4 பேரும் அவர்களுடைய வழக்கறிஞர் ஒருவருடன் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் இன்றும் நாளையும், டெல்லியில் இருந்து வந்திருக்கும் தடயவியல்துறை அதிகாரிகள் சோதனை நடத்த இருக்கின்றனர்.
கலை.ரா
3 மாநில தேர்தல்: முக்கிய அறிவிப்பு!
டெல்லி பயணம்: அமித்ஷாவை சந்திக்கும் ஆளுநர் ரவி