பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்றவர்களை தடுத்து நிறுத்தி, அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வர்த்தகத்தை பெருக்கவும் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து கடந்த 100- நாட்களுக்கு மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4000 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் கையப்படுத்தப்படும்போது 13 கிராமங்கள் பாதிக்கும் என்பது அவர்களது குற்றச்சாட்டு.
விமான நிலையம் அமைந்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். ஏரிகள், குளங்கள். குடியிருப்புகள் பாதிக்கப்படும். எனவே விமான நிலையம் விமான நிலையம் அமைக்கவேண்டாம் என்று கூறி ஏகணாபுரம் கிராம மக்கள் பேரணியாக சென்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு வழங்க புறப்பட்டனர்.
இதனால் 500 க்கும் அதிகமான போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர். ஏகனாபுரத்தில் இருந்து பேரணி துவங்கிய 500 மீட்டர் தொலைவில் போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர்.
பேரணியாக வந்த கிராம மக்களுடன் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நாளை சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அன்பரசன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு ஆகியோரை சந்திக்க அனுமதி பெற்று தருவதாக உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கிராமமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஏகனாபுரம் கிராம மக்கள், 146 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எங்கள் ஒரே கோரிக்கை பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும். மாற்று இடம் கொடுத்தாலும் நாங்கள் செல்ல மாட்டோம். சாகும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
கலை.ரா
இறந்த மகளுக்கு பாடகி சித்ராவின் உருக்கமான பதிவு!
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவு திறப்பு!