rajnath singh chennai flood

மழை பாதிப்பு: ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த ராஜ் நாத் சிங்… முதல்வருடன் ஆலோசனை!

சென்னை வந்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் சென்று மழை வெள்ள பாதிப்புகளை இன்று (டிசம்பர் 7) ஆய்வு செய்தார்.

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறியது. தொடர்ந்து 4வது நாளாக பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வடியவில்லை.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே மழை பாதிப்பை சரி செய்ய நிவாரண நிதியாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மத்திய அமைச்சரை வரவேற்றனர்.

பின்னர் மழை பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சரிடம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

வெள்ளத்தில் கலந்த எண்ணெய் கழிவு.. ஆபத்தில் பொதுமக்கள்: காப்பாற்றுமா அரசு?

ரூ.4 ஆயிரம் கோடியில் வடிகால் பணிகள்… வெள்ளை அறிக்கை வெளியிடுவீர்களா?: எடப்பாடி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts