சாண்ட்விச் என்றாலே குழந்தைகள் குஷியாகிவிடுவார்கள். அதுவும் காலை பிரேக் ஃபாஸ்ட் சாண்ட்விச் என்றால் இட்லி தோசையிலிருந்து விடுதலை என மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். இதனால் உங்களுக்கும் சிரமமின்றி சமையல் வேலை எளிதாக முடிந்துவிடும். அப்படிப்பட்ட சாண்ட்விச்சை சத்தானதாக செய்ய இந்த ராஜ்மா ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
பிரெட் ஸ்லைஸ் – 6
வேகவைத்த ராஜ்மா – 100 கிராம்
பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் குடமிளகாய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன்
நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் – 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கவும்)
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் சேர்த்து பூண்டு, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அடுத்து வெங்காயம், முட்டைகோஸ், வெங்காயத்தாள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அடுத்து ராஜ்மா சேர்த்து வதக்கவும். கடைசியாக குடமிளகாய் வகைகளைச் சேர்த்து ஒரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ் தூவி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
ஒரு பிரெட் ஸ்லைஸில் தக்காளி சாஸ் தடவி, அதன் மேல் மொசரெல்லா சீஸ் தூவி, செய்துவைத்த ஃபில்லிங்கை தேவையான அளவு வைத்து மேலே மொசரெல்லா சீஸ் தூவி, மற்றொரு பிரெட் ஸ்லைஸில் தக்காளி சாஸ் தடவி மூடி சாண்ட்விச் மேக்கரில் ஒரு மேஜை கரண்டி வெண்ணெயை இரண்டு பகுதியிலும் தடவி தயார் செய்து வைத்துள்ள பிரெட் சாண்ட்விச்சை வைத்து கருகாமல் கிரில் செய்து எடுக்கவும் இதேபோல மற்ற பிரெட் ஸ்லைஸ்களையும் செய்யவும். ரொம்பவே சுவையான ஹெல்த்தியான, வித்தியாசமான ராஜ்மா சாண்ட்விச் ரெடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா மசாலா
கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா புளிக்குழம்பு
இதுக்கெல்லாமா பிரேக்கிங் போடுவீங்க… அப்டேட் குமாரு
ஒரே நாளில் 9 லாட்டரி விற்பனையாளர்கள் கைது… அதிரடியாக களமிறங்கிய கலைவாணன் ஐபிஎஸ் : யார் இவர்?