இன்று நடிகர் ரஜினிகாந்த் 73ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ரஜினியின் ரசிகர்கள் அவரது இல்லம் முன்பு குவிந்து வருகின்றனர்.
மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் போயஸ் கார்டன் இல்லம் முன்பு குவிந்து ரஜினியைச் சந்திக்கக் காத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 12) காலை 10 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், “சார் ஊர்ல இல்ல. இருந்திருந்தால் நிச்சயம் உங்களைச் சந்தித்திருப்பார். மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம். அவரது சார்பாக நான் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இதனால் ரஜினியைக் காண வந்த அவரது தீவிர ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

முன்னதாக ரஜினியின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுடன் சேர்ந்து லதா ரஜினிகாந்த் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடினார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பிரியா