அப்பல்லோ: பிளாட்டினம் வார்டில் ரஜினி… இத்தனை வசதிகளா?

Published On:

| By Aara

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த், இன்று (அக்டோபர் 3) அந்த மருத்துவமனையில் பிளாட்டினம் வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

செப்டம்பர் 30 இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த்துக்கு, மறுநாள் காலை 5 மணி தொடங்கி சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் சிகிச்சை நடைபெற்றது.

இதுகுறித்து மின்னம்பலத்தில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டு வந்தோம். அக்டோபர் 1 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“ரஜினிக்கு இதயத்தில் இருந்து பிரியும் முக்கிய தமனியான பெருநாடியின் சுவரில் வீக்கம் இருந்ததால், ரத்த நாளத்தில் அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கத்தீடர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மூத்த இருதய சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ், பெருநாடியில் ஒரு ஸ்டென்டை வைத்து வீக்கத்தை முழுவதுமாக சரி செய்துள்ளார். திட்டமிட்டபடி இந்த நடைமுறை நடந்தது என்பதை அவரது நலம் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். ரஜினிகாந்த் நல்ல நிலையில் இருக்கிறார். இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்  சிசியு எனப்படும் க்ரிட்டிகல் கேர் யூனிட்டில் வைத்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்த ரஜினிகாந்த், இன்று (அக்டோபர் 3) அப்பல்லோ மருத்துவமனையின் நான்காவது தளத்தில் உள்ள பிளாட்டினம் வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தபோது,

“ரஜினிகாந்த் பிளாட்டினம் வார்டில் அறை எண் 4410 இல் இருக்கிறார். பிளாட்டினம் வார்டு என்பது அப்பல்லோ மருத்துவமனையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகும்.

தனித்துவமான சேவைகளை இந்த பிளாட்டினம் வார்டு வழங்குகிறது.

மிகப் பரந்து விரிந்த இந்த வார்டு கிட்டத்தட்ட ஒரு வீட்டைப் போன்றே இருக்கும். மருத்துவமனையின் பொது கிச்சனில் இருந்துதான் அனைவருக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும். ஆனால் பிளாட்டினம் வார்டில் மைக்ரோவேவ், குளிர்சாதனப் பெட்டி மற்றும் காபி மேக்கருடன் கூடிய  தனி சமையலறை இருக்கும். மருத்துவர்கள் அறிவுறுத்தல்படியான உணவுகளை தனி சமையல்காரர் மூலமாக சமைத்துக் கொள்ளலாம்.

மேலும் ஒரு மினி லைப்ரரியுடன் கூடிய பார்வையாளர்களை சந்திப்பதற்கான ஒரு லவுஞ்ச். அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் நடைபயிற்சி செய்ய ஒரு நடைபாதையும் உண்டு. இப்படிப்பட்ட வசதிகள் கொண்ட பிளாட்டினம் வார்டில்தான் ரஜினி இப்போது இருக்கிறார்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

2024 மகளிர் உலகக்கோப்பை : ஏ.ஐ. மென்பொருள் அறிமுகம்!

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share