நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று (அக்டோபர் 1) காலை 5 மணிக்கு தொடங்கி, சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேல் முக்கிய அறுவை சிகிச்சை நடந்து, ரத்த நாளத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து மின்னம்பலத்தில் இன்று காலை 10 மணிக்கு ‘ரஜினியின் தொடையைத் திறந்து… அப்பல்லோவில் அளிக்கப்படும் சிகிச்சை- மருத்துவ ரிப்போர்ட்’ என்ற தலைப்பில் விரிவான செய்தியை வெளியிட்டோம்.
இந்த நிலையில் ரஜினிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்களில் தொடர்ந்து விசாரித்தோம்.
“ரஜினிக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சினைக்கு மருத்துவ ரீதியான பெயர் Aortic Aneurysm. இதயத்திலிருந்து வரும் முக்கிய தமனியான பெருநாடியின் சுவரில் ஏற்படும் வீக்கம்தான் இது. தமனி சுவரில் பலவீனமான பகுதியில் பெருநாடி அனீரிசிம்கள் உருவாகின்றன. அவை சிதைந்து (வெடிப்பு) அல்லது பிளவு ஏற்படலாம், இதனால் உள் இரத்தப்போக்கு ஏற்படலாம் அல்லது இதயத்திலிருந்து பல்வேறு உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கலாம். இதை சரிசெய்வதற்குத்தான் ஸ்டன்ட் பொருத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5 மணி முதல் 8 மணிக்கு மேல் வரை நீடித்த அந்த ஆபரேஷன் முடிந்து ரஜினி அப்பல்லோ மருத்துவமனையின் முதல் தளத்தில் CCU வில் பெட் நம்பர் 61 இல் ஓய்வெடுத்து வருகிறார். அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
CCU வில் ஒன்று அல்லது இரண்டு நாள் இருக்கவேண்டியிருக்கும். அதையடுத்து ICU க்கு மாற்றி, அதன் பிறகுதான் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு பின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
இப்போதைய நிலவரப்படி குறைந்தது மூன்று முதல் நான்கு நாட்கள் ரஜினி மருத்துவமனையில் இருக்கக் கூடும். ரஜினிக்கு 73 வயது ஆகிறது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையை உடல் ஏற்றுக் கொள்ளும் வேகத்தைப் பொறுத்து அவரது மருத்துவமனை வாசம் குறையவோ கூடவோ வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள்.
ரஜினி விரைவில் குணமடைய தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுவதும் பலரும் பிரார்த்தித்து வருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
காந்தி மண்டபத்தில் மதுபாட்டில் : ஆளுநர் ரவி வருத்தம்!