தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று (செப்டம்பர் 30) மதியம் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இதே மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். பின்னர் அமெரிக்காவில் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து தனது பல்வேறு படங்களில் ரஜினி பிசியாக நடித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கிட்னியில் சதை வளர்ந்திருப்பதாகவும், அதற்காக அவருக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது எனவும் அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு விளக்கமும் வரவில்லை. எனினும் அவரது உடல்நிலை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மருத்துவனை தரப்பில் இருந்து இன்று காலை செய்திக்குறிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 நியூஸ் : ஜம்மு காஷ்மீர் தேர்தல் முதல் இந்தியா – வங்கதேசம் இறுதி நாள் ஆட்டம் வரை!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி… மோடிக்கு அண்ணாமலை கடிதம்!