முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கில் முன்னாள் டிஜிபி திரிபாதி இன்று (நவம்பர் 25) நேரில் ஆஜரானார்.
அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது பாதுகாப்புப் பணிக்காகச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு செங்கல்பட்டு எஸ்.பி.யாக இருந்த கண்ணன் உதவியாக இருந்ததாக அவர் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வருகிறது.

இந்த வழக்கு கடந்த நவம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் சீமா அகர்வால், நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அவரிடம் ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞரும், எஸ்.பி.யாக இருந்த கண்ணன் தரப்பு வழக்கறிஞரும் குறுக்கு விசாரணை நடத்தினர்.
அன்று நடைபெற்ற விசாரணை விவரங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதுபோன்று அரசு தரப்பு சாட்சியாக முன்னாள் டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு இன்று (நவம்பர் 25) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் டிஜிபி திரிபாதி ஆஜரானார்.
குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் இருவரும் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பிரியா
மெஸ்ஸியின் சாதனை… தகர்த்தெறிந்த ரொனால்டோ
தில் தவான் …அசத்தல் ஸ்ரேயஸ்.: நியூசிலாந்தை வெல்லுமா இந்தியா?