தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, மதுரை மாவட்ட கடைகளில் டீ, காபி விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. இது டீ பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் ஆரஞ்சு பால் (நிறைகொழுப்பு பால் ) பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்தது.
அண்மையில் பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விலை மாற்றம் நேற்று (நவம்பர் 5 ) முதல் அமலுக்கு வந்தது.
இந்த விலை மாற்றம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடுசெய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தபட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லறை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்தழைப்பு நல்க வேண்டும் என்றும் ஆவின் நிர்வாகம் கூறியது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள டீக்கடைகளில் டீ, காபி விலையை ரூ.15 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக மதுரை மாவட்ட காபி, டீ வர்த்தக சங்கம் இன்று (நவம்பர் 6 ) முதல் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது.
மேலும் டீத்தூள், காபிதூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆர்.எஸ்.எஸ் பேரணி – பின்வாங்கிய காரணம் இதுதான்: திருமாவளவன்
படமா? நிஜமா? – காரில் கெத்தாக வலம் வந்த பவன்