கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து 12, 13, 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 14 ) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்,
ஒரு சில இடங்களில் இன்று முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
டிசம்பர் 14 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்,
சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அந்தமான் கடல் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று,
மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால்,
டிசம்பர் 18 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
என் உயரம் எனக்கு தெரியும்: அமீரின் அரசியல் பதில்!
அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றால் எனக்கு வருத்தம் : ரொனால்டோ