தமிழ்நாட்டில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இன்றும் (ஏப்ரல் 6 ), நாளையும் (ஏப்ரல் 7) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 8, 9, 1௦, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் ஆகியவற்றில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ், ஈரோட்டில் 41 .2° செல்சியஸ், சேலத்தில் 41.2° செல்சியஸ், திருப்பத்தூரில் 40.2° டிகிரி செல்சியஸ் மற்றும் தருமபுரியில் 41.௦° டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 35.8° செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 34.7° செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36°-37° டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.
கடலோர தமிழக மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.
தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய் தேவரகொண்டாவின் ‘தி பேமிலி ஸ்டார்’ எப்படி இருக்கிறது?- திரை விமர்சனம்!
மாநிலங்களை பாளையக்காரர்களாக மாற்றும் பாஜக: ப.சிதம்பரம் தாக்கு!
“புகழேந்தியின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு”: ஸ்டாலின் இரங்கல்!
Comments are closed.