தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை உண்டு என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையினை இங்கே பார்க்கலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வானிலை நிலவரம்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
திற்பரப்பு (கன்னியாகுமரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 3, மஞ்சளாறு (தேனி) 2, சின்கோனா (கோயம்புத்தூர்). பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 1.
அதிகபட்ச வெப்பநிலை
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பாகவும், ஒருசில இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருந்தது.
புதுவையில் இயல்பை விட சற்று அதிகமாகவும், காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் இருந்தது.
உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 37° – 40° செல்சியஸ், கடலோரப் பகுதிகளில் 33° -36° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 23°-29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 40.4° செல்சியஸ். கரூர் பரமத்தியில் 40.2° செல்சியஸ், சேலம் மற்றும் திருச்சியில் 39.3° செல்சியஸ், மதுரை நகரம் 39.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
நாமக்கல், தருமபுரி, கோயம்புத்தூர், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸ் முதல் 39° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பாக இருந்தது. மீனம்பாக்கத்தில் 35.7° செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 35.0° செல்சியஸும் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை
ஏப்ரல் 2: தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 3: தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 4 முதல் 7 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 8-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
ஏப்ரல் 2 முதல் 6 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2°-3° செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.
இதனால் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 39°– 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37° – 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34°-37° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்
அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 35°-36° டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.
தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.
டெல்டா மாவட்டங்கள்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நம்பர் 1 இடத்தை தக்கவைத்த திரிஷா… சம்பளம் எவ்ளோன்னு பாருங்க!
ஸ்டார் ஹீரோவிற்கு வில்லியாகும் ஆண்ட்ரியா?
GOLD RATE: லேசாக குறைந்த விலை… எல்லாமே கண் துடைப்பு தான்!