Rain Update: ‘ஜில்லென ஒரு மழைத்துளி’… குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்!

தமிழகம்

கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று (ஏப்ரல் 1), தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை (ஏப்ரல் 2) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 3 தொடங்கி 7-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்று தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை வரை தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் 2 சென்டிமீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தலா 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை”, என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகம் பதிவாகியுள்ள இடங்கள் குறித்தும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் கரூர் பரமத்தி 40 டிகிரி செல்சியஸ் உடன் முதலிடத்தையும், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் 39.1 டிகிரி செல்சியஸ் உடன் இரண்டாவது இடத்தினையும் பிடித்துள்ளன.

சென்னையை பொறுத்தமட்டில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பமும், நுங்கம்பாக்கத்தில் 34.6 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகி இருக்கின்றன.

தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.

டெல்டா மாவட்டங்கள்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை.

வட தமிழக மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, வேலூர்.

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எம்.பில் படித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை!

சனாதனம் வழக்கு: மனுவில் திருத்தம் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

அடுத்த 100 நாட்கள்… ஆர்பிஐ அதிகாரிகளுக்கு மோடி கொடுத்த அசைன்மென்ட்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *