தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று (நவம்பர் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி,
கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.’ என கூறியுள்ளது.
இந்நிலையில் ,மழை விவரம் குறித்து சமூக வலைதளமான பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெதர்மேன்,
”சென்னையில் மாலை நேரத்தில் லேசாக மழை இருக்கும். நேற்று போலவே உள் மாவட்டங்களான ஈரோடு, சேலம், தர்மபுரி, பெரம்பலூர், அரியலூரில் மழை பெய்யும்.
இன்று இரவும் நாளையும் திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.
டெல்டாவில் கனமழை பெய்யும். தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கனியாமூர் பள்ளியில் கலெக்டர் ஆய்வு!
டெலிகிராமுக்கு போட்டி: வாட்ஸ்அப் செய்த புதிய மாற்றம்!