rain in 13 districts

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்… 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (டிசம்பர் 3) புயலாக வலுப்பெற்றுள்ளது. மிக்ஜாம் என்று பெயரிடப்பட்ட இந்த புயலானது டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திர கடலோரப்பகுதியில் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது புயலானது புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவிலும், தென்கிழக்கே மசூலிப்பட்டினத்தில் இருந்து 550 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

புயல் காரணமாக சென்னை மற்றும் புதுச்சேரியில் அதிக மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதியம் 1 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இதனிடையே புயல் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி, 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

சத்தீஸ்கர்: வெற்றியை நோக்கி பாஜக!

சண்ட செய்யும் உறியடி விஜய்… கமல் பாடல் ரெபரன்சில் “Fight Club” டீசர்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts