தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 24) 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் தமிழகத்தில் வெப்பம் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி அளவில் அதிகரித்துள்ளது.
இதனால் அதிக வெப்பத்தால் மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெப்பம் சதம் அடித்து விடுகிறது.
இந்நிலையில் தான் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இன்று ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் ஏப்ரல் 26 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
மதுவிற்கு அனுமதி: அரசியல் கட்சிகள் எதிர்ப்பு!
டார்கெட் ஸ்டாலின்… அண்ணா நகர் கார்த்திக் வீட்டில் ஐடி ரெய்டு பின்னணி!