சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 17) அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த 9ஆம் தேதி உருவாகியிருந்த மாண்டஸ் புயல், சென்னை மகாபலிபுரம் அருகே நள்ளிரவு கரையைக் கடந்தது.
இந்த மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9இல் விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்யும் வகையில் நாளை (டிசம்பர் 17) பள்ளிகள் இயங்கும் என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ளிக்கிழமை பாடவேளையைப் பின்பற்றி முழு வேலைநாளாகக் கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதுபோல், மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 2ஆம் தேதி விடுமுறை விடப்பட்டது. இதை ஈடுசெய்யும் வகையில், நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
பொறியியல் தேர்வு தேதி மீண்டும் ஒத்திவைப்பு!
அரசு வேலை : டிஎன்பிஎஸ்சி கொடுத்த மெகா ஷாக்!