சேதமடைந்த சான்றிதழ்: சிறப்பு முகாம் எப்போது?

தமிழகம்

மழை, வெள்ள பாதிப்புகளிலிருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் படிப்படியாக மீண்டு வருகிறது.

இந்தநிலையில், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று (டிசம்பர் 9) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில் கட்டணமின்றி, சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம்,, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வருகிற டிசம்பர் 11 அன்றும், சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் டிசம்பர் 12 அன்றும் தொடங்கப்படும்.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும். மேற்படி சிறப்பு முகாம்களில் பொதுமக்களின் வசதிக்கென இ – சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எடப்பாடி நிவாரண நிகழ்ச்சி…சிறுமி உயிரிழப்பு: DYFI போராட்டம்!

முதல்வருக்கு பதில் தீரன் சின்னமலை சிலையை திறக்கும் முன்னாள் ஆளுநர்: நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *