அடுத்த 7 நாட்களுக்கு மழை… வானிலை மையம் அறிவிப்பு!

Published On:

| By Kavi

தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி வரை அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் ஒகேனக்கல்லில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 10செமீ மழையும், மேல் பவானியில் 8 செமீ மழையும் பெய்துள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூலை 20) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (20.07.2024) காலை ஒரிசா கடற்கரையை ஒட்டிய சில்கா ஏரி அருகில் நிலவுகிறது.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரிசா மற்றும் சத்திஸ்கர் அருகில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றுழத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21.07.2024 முதல் 26.07.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 34 – 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 – 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 35 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மூடு விழா நடத்திவிட்டு எதற்கு இந்த நாடகம்: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி!

தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel