Rain for seven days

ஏழு நாட்களுக்கு மழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகம்

 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 17) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூலை 17) மற்றும் நாளை (ஜூலை 18) தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 19 முதல் 23 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று கூறியுள்ளது.

மேலும், ”சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்

இன்று  முதல் ஜூலை 19 வரை..

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

heavy rain in tamil nadu meteorological centre reports

இலங்கை கடலோரப்பதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் .

அரபிக்கடல் பகுதிகள்

இன்று முதல் ஜூலை 19 வரை…

இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்” என்று கூறியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே… பாட்டு பாடி பதில் சொன்ன துரைமுருகன்

திமுகவை மிரட்ட வேண்டும் என்ற எண்ணம் வெற்றி பெறாது: கே.பாலகிருஷ்ணன்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0