சென்னையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் வேலைக்கு செல்லும் நேரமான, அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றாலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.
அதன்படி இன்று அதிகாலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர், ராயப்பேட்டை, அடையார் , வேளச்சேரி ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கான மழை அறிவிப்பை சென்னை வானிலை மையம் இன்று காலை வெளியிட்டுள்ளது.
காலை 7 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில், “குன்றத்தூர், மயிலாப்பூர், ஸ்ரீபெரும்புதூர், எழும்பூர், கிண்டி,வேளச்சேரி பல்லாவரம்,ஆலந்தூர்,அயனாவரம்,
மாம்பலம்,சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரியா
தினமும் 60 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைக்க இலக்கு: கட்காரி
கால்வாய்களில் குப்பைகளைக் கொட்டினால்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!