தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இந்த வாரம் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவித்தது.
இதன் காரணமாக, இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
அதன்படி அடுத்த 2 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவள்ளூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா