மழை வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்கவுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையின் பல பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 3 நாட்களாகப் பால், உணவு இன்றி, மின்சாரம் இன்றி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல்வேறு தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் திரும்பும் பக்கமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண மக்கள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கவுள்ளது.
இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தைப் பொதுமக்களுக்கு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா