மாண்டஸ் தாக்கம்: 3 நாட்களுக்கு காத்திருக்கும் கன மழை!

Published On:

| By Monisha

இன்று (டிசம்பர் 11) முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. ஆனால் டிசம்பர் 8 தேதியிலிருந்தே தமிழகத்தில் மழை தீவிரம் தொடங்கிவிட்டது.

தொடர்ந்து புயல் கரையைக் கடந்த பிறகும் விடாமல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

தற்போது மாண்டஸ் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து தமிழக உள் மாவட்டங்களில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

ஜிகர்தண்டா ரசிகர்களுக்கு கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

கான்வாயில் தொங்கிய மேயர்: விளாசிய அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share