ரயில்வே வாரிய தேர்வில் மற்ற மாணவர்களைக் காட்டிலும் உயர்சாதி ஏழை பிரிவினருக்குக் குறைந்த கட் ஆப் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழைகளுக்கு மத்திய அரசு 10 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வந்தது. இதற்கு பாஜக அல்லாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்ட நிலையில், 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதில் முக்கிய கேள்வியாக, ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் அதாவது மாதத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி அரசு வேலைகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், தற்போது அவர்களுக்கான கட் ஆப் மதிப்பெண்ணும் குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரயில்வே தேர்வு வாரியம் குரூப் டி தேர்வை நடத்தியது.
ட்ராக் மெயின்டெய்னர் கிரேடு-IV, உதவியாளர், நிலை-I பதவிகள் உள்ளிட்ட பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு 17.08.2022 – 11.10.2022 வரையிலான நாட்களில் தேர்வு நடத்தப்பட்டது.
கணினி தேர்வு, உடற் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

இந்நிலையில் கணினி வழி தேர்வுக்கான முடிவுகள் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களில் சென்னை மண்டலத்துக்கான உடல் தகுதித் தேர்வு ஜனவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்துக்கான உடல் தகுதித் தேர்வு ஜனவரி 12 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனிடையே, இந்த தேர்வு குறித்த கட் ஆப் மதிப்பெண் வெளியாகி தேர்வர்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெர்செண்டைல் ஸ்கோர், நார்மலைஸ்டு மதிப்பெண் என வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்ணில் பழங்குடியினரைவிட உயர்சாதி ஏழைகளுக்குக் குறைவான கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெர்செண்டைல் ஸ்கோரில் பொதுப் பிரிவினருக்கு 94.06, எஸ்.சி பிரிவினருக்கு 86.46, எஸ்.டி பிரிவினருக்கு 81.40, ஓபிசி பிரிவினருக்கு 90.84 என வழங்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்தின் பின் தங்கியவர்களுக்கு 77.91 எனக் குறைத்து வழங்கப்பட்டுள்ளது.
அதுபோன்று நார்மலைஸ்டு மதிப்பெண்ணில், பொதுப் பிரிவினருக்கு 60.95, ஓபிசி பிரிவினருக்கு 55.65, எஸ்சி பிரிவினருக்கு 49.89, எஸ்டி பிரிவினருக்கு 43.58 குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தின் பின் தங்கியவர்களுக்கு மற்ற பிரிவினரைக் காட்டிலும் 40 என கட் ஆப் குறைத்து வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் எஸ்சி, எஸ்டி பிரிவினரைக் காட்டிலும், 60,000 ஊதியம் பெரும் குடும்பத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
இந்த தேர்வு மொத்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்களுக்கு நடைபெற்றது. தமிழக பிரிவில் 9000+ பணியிடங்களபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
ரிஸ்க் தொகுதிகள்- ரிஸ்க் மாநிலம்: பாஜகவின் பக்கா பிளான்!
துபாயிலிருந்து சென்னை வந்தவர்களுக்கு கொரோனா!