சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து குஜராத் செல்லும் வாராந்திர ரயிலில் பயணிகளுக்கு அசுத்தமான போர்வை மற்றும் தலையணை வழங்கியதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குஜராத் செல்லும் வாராந்திர ரயில் நேற்று (நவம்பர் 20) இரவு 10.44 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
ரயிலில் உள்ள ஏ1, ஏ2, பி1, பி4 ஆகிய குளிர்சாதன வசதி உள்ள பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கிய போர்வை மற்றும் தலையணை அசுத்தமான முறையில் இருந்துள்ளது.

இதுதொடர்பாக பயணிகள் பயணச்சீட்டு பரிசோதகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். பயணிகளுக்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து பயணிகள், பயணச்சீட்டு பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பயணிகளுக்கும் பயணச்சீட்டு பரிசோதகருக்கும் வாக்குவாதம் முற்றியது.
இதனால் குஜராத் ரயிலானது அரக்கோணம் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12.01 மணிக்கு நிறுத்தப்பட்டது.

உடனடியாக அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் புதிய போர்வைகள் மற்றும் தலையணைகள் பயணிகளுக்கு வழங்குவதாக உறுதியளித்தனர்.
இதனை தொடர்ந்து பயணிகள் சமரசமடைந்தனர். பின்னர் 20 நிமிடங்கள் கால தாமதமாக அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து குஜராத் ரயில் புறப்பட்டது. வழக்கமாக இந்த ரயிலானது அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிற்காது. பயணிகள் வாக்குவாதம் காரணமாக 20 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டது.
செல்வம்
பட்ஜெட்: பல்துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் ஆலோசனை!
சதுரகிரி மலைக்கோயில்: பக்தர்கள் செல்ல தடை!