பெண் ரயில்வே கார்டை வெட்டி செல்போன், 500 ரூபாய் பணம் பறிப்பு!

Published On:

| By christopher

railway guard attacked for cell phone and 500 rupees!

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில்வே கார்டாக வேலை பார்ப்பவர் ராக்கி (28) கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர். இவர் ரயில்வே காலனியில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் திண்டுக்கலிருந்து திருநெல்வேலி செல்லும் காலி ரயில் பெட்டிகளின் கார்டாக திண்டுக்கல்லில் ஏறியுள்ளார். ரயில் மதுரை கூடல்நகர் பகுதியில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்த போது திடீரென்று ரயில் பெட்டியில் ஏறிய இருவர் ரயில்வே பெண் கார்டு கையிலிருந்த கை பையை பறிக்க முயன்று உள்ளார்கள்.

அவர் தர மறுத்ததையடுத்து கத்தியால் தலையில் வெட்டி காயத்தை ஏற்டுத்தி பையை பறித்து சென்றனர். பையில் செல்போன் மற்றும் 500 ரூபாய் பணம் இருந்துள்ளது.

தகவல் அறிந்த இரயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பெண் கார்டை மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்பு ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை விசாரித்து தேடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராமலிங்கம்

தேவ கவுடாவின் பேரன் நடத்திய ஆபாச லீலைகள்… லீக் ஆன வீடியோக்கள்! காத்திருந்து கதை முடித்த பாஜக, குமாரசாமி

90ஸ் கிட்ஸை கவரும் குரங்கு பெடல் டிரைலர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share