தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 14) பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகங்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு அலுவலகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் இன்று (அக்டோபர் 14) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம், திருச்சி பாலக்கரையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம்,

நாகையில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகம், தருமபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வருகின்றனர்.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், அதன் அறைகளை மூடிக்கொண்டு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெ.பிரகாஷ்

மாணவி சத்யா கொலை: அக்டோபர் 28 வரை சதீஷூக்கு சிறை!

தற்கொலை செய்துகொண்டவர் பழங்குடியினரே இல்லை: தமிழக அரசு

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts