ப்ரொபஷனல் கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 1989 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு தற்போது இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, துபாய் என வெளிநாடுகளிலும் தனது கிளையை பரப்பியுள்ளது. மொத்தம் 3,300 கிளைகள் உள்ளன.
இந்த நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் ப்ரொபஷனல் கொரியர் நிறுவனத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சென்னையில் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் பிராட்வே உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை,ஆவணங்கள் குறித்து வருமானவரி துறை அறிக்கை வெளியிட உள்ளது.
பிரியா
துணிவு Vs வாரிசு: ஒரே நாளை லாக் செய்த அஜித் விஜய்
ஆன்லைன் ரம்மி தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு: அன்புமணி