குமரி வந்தடைந்தார் ராகுல் காந்தி

தமிழகம்

‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்குவதற்காக ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 7) கன்னியாகுமரி வந்தடைந்தார் .

இந்திய அளவில் கட்சியைப் பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்கிறார்.

இன்று தமிழ்நாடு கன்னியாகுமரியிலிருந்து ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவிற்கு இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் இந்த நடைப்பயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தயப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாகக் காஷ்மீரைச் சென்றடைகிறது.

நடைப்பயணம் இன்று தொடங்கவுள்ள நிலையில் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ராகுல் காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தற்போது கன்னியாகுமரி வந்தடைந்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு நடைப்பயணம் தொடங்கவுள்ளது.

மோனிஷா

ராகுலுக்கு எதிர்ப்பு : ரயிலில் வைத்து அர்ஜூன் சம்பத் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *