அம்பேத்கர் குறித்து சர்ச்சைப் பேச்சு: அமித்ஷா ராஜினாமா செய்யாதது ஏன்? – ராகுல் கேள்வி!

Published On:

| By Selvam

அம்பேத்கரின் நினைவுகளையும் பங்களிப்பையும் பாஜக அழிக்க விரும்புகிறார்கள் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (டிசம்பர் 19) தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதானிக்கு எதிரான வழக்கு அமெரிக்காவில் வந்தது. ஆனால், இந்தப் பிரச்னை பற்றிய விவாதத்தைத் பாஜக தவிர்த்துவிட்டு திசை திருப்ப முயன்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது அவரது மனநிலையை காட்டியுள்ளது.

அமித்ஷா மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால், அமித் ஷா அதை செய்ய மறுத்துவிட்டார். அம்பேத்கரின் நினைவுகளையும் பங்களிப்பையும் அழிக்க விரும்புகிறார்கள்.

இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் அம்பேத்கர் சிலையிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி சென்றுகொண்டிருந்தோம்.

ஆனால், பா.ஜ.க எம்.பி.,க்கள், பார்லிமென்ட் வளாகத்தின் படிக்கட்டுகளில் நின்று கொண்டு அவைக்குள் செல்ல எங்களை அனுமதிக்கவில்லை.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-சின் சிந்தனை அரசியல் சட்டத்திற்கும்  அம்பேத்கருக்கும் எதிரானது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அம்பேத்கர் குறித்து அமித் ஷா சர்ச்சைப் பேச்சு : முடங்கியது நாடாளுமன்றம்!

அமித்ஷா குறித்த கேள்வி… நழுவிய எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel