காலை வேளையில் சாப்பிடும்போது ஒரு நாள் முழுவதும் இயங்கத் தேவையான ஆற்றலைத் தரும் உணவுகளில் இந்த ராகி சேமியா கிச்சடியும் ஒன்று. இதில் சேர்க்கப்படும் கேழ்வரகு, எள் இரண்டிலும் கால்சியம் மிக அதிக அளவில் இருக்கிறது. அனைவருக்கும் ஏற்ற இந்த சேமியா கிச்சடி, மூட்டுவலியைக் குறைக்கும்; எலும்புகளை பலமாக்கும்.
என்ன தேவை?
ராகி சேமியா – ஒரு கப்
விருப்பமான காய்கறிக் கலவை – அரை கப்
முந்திரி, பச்சை மிளகாய் – தலா 2
கடுகு, உப்பு, எண்ணெய் – சிறிதளவு
எள்ளுப் பொடி – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, முந்திரிப் பருப்பைத் தாளித்து, பச்சைமிளகாயை வதக்கி, பின்னர் காய்கறிக் கலவையைப் போட்டு வதக்கி, நீர் தேவையான அளவு விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிவந்ததும் ராகி சேமியாவை போட்டுக் கிளறி, வெந்ததும் எள்ளுப் பொடி தூவி இறக்கவும்.
காலை உணவைத் தவிர்த்தால், உடல் எடை குறையுமா?