தமிழர் திருவிழாக்களின்போது செய்யப்படும் பலகாரம், முறுக்கு போன்றே தோற்றம் கொண்ட தேன்குழல். வழக்கமாக அரிசி மாவு, உளுந்து மாவு ஆகியவற்றைக் கலந்து செய்வார்கள். இந்த தேன்குழலை சத்தான கேழ்வரகு மாவிலும் தயாரித்து அசத்தலாம்.
என்ன தேவை?
கேப்பை (கேழ்வரகு) மாவு – முக்கால் கிலோ
அரிசி மாவு – கால் கிலோ
வறுத்த உளுத்தம் மாவு – கால் கிலோ
வெண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் மூன்று வகை மாவு, உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளவும். தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் ,தேன்குழல் அச்சில் மாவை வைத்துப் பிழிந்து வெந்து வரும் போது திருப்பி விட்டு வேக வைக்கவும். சலசலப்பு அடங்கியதும் எடுக்கவும். அதிகப் படியான எண்ணையை வடித்து விட்டு காற்று புகா டப்பாகளில் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: காய்கறிகளை இப்படித்தான் பத்திரப்படுத்த வேண்டும்!
கிச்சன் கீர்த்தனா: சாமை அதிரசம்!
பிரச்சனைகள் பலவிதம் அதில் இது தனி ரகம் – அப்டேட் குமாரு
கெளரி லங்கேஷ் கொலை: ஜாமீனில் வந்தவர்களுக்கு மரியாதை!